Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்படி இருந்துச்சு?…. பா.ஜ.க தலைவர் தகவல்…..!!!!

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த காரிலிருந்த சிலிண்டர் சென்ற 24ம் தேதி வெடித்தது. அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர் பெயர் ஜமேசா முபின் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அக்காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அவற்றில் கடந்த சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டிலிருந்து முபின் உள்ளிட்ட 5 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனைத்தொடர்ந்து முபின் உடன் இருந்த அந்த 4 பேர் யார்?.. அந்த மூட்டையில் என்ன இருந்தது?.. என்பது குறித்த கேள்விகள் எழுந்தது. இதனிடையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), பிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடி விபத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம் என்றும் முபினுக்கும் அந்த இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ISIS முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுருவி இருக்கின்றனர். விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் “என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியவரும் சமயத்தில் நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். அத்துடன் என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள். எனது இறுதிசடங்கில் பங்கேறுங்கள்” என பதிவு செய்துள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம் ஆகும். இன்னும் 2 நாட்களில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு முறையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் தமிழக ஆளுநரை சந்திப்போம் என்று கூறினார்.

Categories

Tech |