Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை – டெல்லி சரக்கு ரயில் சேவை” மீண்டும் இயக்கம்… தொழில்துறையினர் வரவேற்பு…!!!

கோவை – டெல்லி சரக்கு ரயில் சேவை மீண்டும் இயங்கிதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம், வடக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2020 ஆம் வருடம் முதல் சரக்கு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்துள்ளது. இதில் மருந்துகள், காய்கறி, பழங்கள், துணிகள், முகக்கவசங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சரக்கு ரயில் இயக்கி வந்த நிறுவனத்துடன் ரயில்வே நிர்வாகம் கொடுத்திருந்த ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் வேறு நிறுவனம் மூலம் புதுடெல்லி சரக்கு விரைவு ரயில் ஒப்பந்த அடிப்படையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் இயங்கியது. இந்த சரக்கு ரயிலை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த சரக்கு ரயிலில் 15 பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் மாதத்தில் இரண்டு முறை செயல்படும். இந்த ரயிலானது சனிக்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், ரேணிகுண்டா, நாகபுரி வழித்தடத்தில் புதுடெல்லி திங்கட்கிழமை இரவு சென்று அடையும். அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு கிளம்பி நாகபுரி, ரேணிகுண்டா, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வடக்கு கோவை ரயில் நிலையத்தை வந்து அடையும். இந்த ரயில் சேவை மீண்டும் இயங்கியதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்து வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories

Tech |