Categories
மாநில செய்திகள்

கோவை தனியார் கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி….. பரபரப்பு சம்பவம்….!!!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுத்தைப்புலி புகுந்து இரண்டு நாய்களை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கோவையை அடுத்த கோவை புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை பிடிப்பதற்காக கோவை புதூர் பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறையினரை அலையவிட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த சிறுத்தைப்புலி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சென்று, அங்கு கட்டிப் போட்டிருந்த இரண்டு நாய்களை அடித்து கொன்றது.

அந்த சிறுத்தை கல்லூரி வளாகத்திற்குள் செல்வதும், படிக்கட்டுகளில் லாவகமாக இறங்குவது போன்ற அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |