கோவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இ எஸ் ஐ அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள அம்மன் கே. அர்ஜுனன் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று உள்ள நிலையில், இன்று அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டு சிகிக்சையில் உள்ளார். ஏற்கனவே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குத் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.