உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள் என்றாலும் பெண்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றால் ஆசிரியர் அல்லது செவிலியராக தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை மாறி தற்போது விமானம் ஓட்டுவது, ரயில் ஓடுவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, இராணுவம், கப்பல் துறையில் வேலை பார்ப்பது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர். இந்நிலையில் பெண்களைப் போற்றும் விதமாக நேற்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
அனைத்து துறைகளிலுமே பெண்கள் சிறப்பாக பணி புரிய முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கோவை மாவட்டம் சித்ரா பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நேற்று ஒரு நாள் மட்டும் பெண்கள் பணியாற்றியுள்ளனர்.. 20க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்த்தல், பாஸ்போர்ட்டுக்கு புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர்.