கோவை -பொள்ளாச்சி இடையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் சாலையில் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வசதியாக ரோட்டின் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த சாலை அமைக்கப்பட்டு இதில் போக்குவரத்து தொடங்கி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஏரளமான இடங்களில் மஞ்சள்நிற கோடுகள் அழிந்துவிட்டது. இதன் காரணமாக 4 வழிசாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்ல துவங்கியது. அத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்தது.
அதன்பின் இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோவை ஈச்சனாரி -பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி இடையில் 4 வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள்நிற கோடுகள் அழிந்து இருந்ததால் மீண்டும் அதை வரைந்து புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையில் மஞ்சள்நிற கோடுகள் வரையும் பணியானது நடந்தது. இப்பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.