கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட ஆம்னி புக்ஸ் என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
பல்வேறு புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் மூலம் நமக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து பயனடைந்து வருகின்றோம். அரசு சார்பிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட “ஆம்னி புக்ஸ்” என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பீளமேட்டை சேர்ந்த தொழில் முனைவோரான கோவிந்தராஜ் மற்றும் சகோதரர்கள் இணைந்து இதை தொடங்கியுள்ளனர்.
6 ஆயிரம் சதுர அடியில் லிப்ட் வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நூலகத்தில் அனைத்து துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. இங்கு ஆராய்ச்சி, போட்டித்தேர்வு நூல்களும் உள்ளன. இதற்கு மாத சந்தா ரூபாய் 225 ஆகும்.