Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே இனி காலை 9 மணி முதல்….. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிகளுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி மையங்களில் உள்ள குறைகள் புகார்கள் ஏதேனும் இருப்பின் 1077 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://coimbatore.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |