கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றனர். கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக காணப்படும். அதனை போல மாநகர பகுதியான ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிக ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் உள்ளன. அது முக்கிய பேருந்து நிலையங்களும் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் எப்பொழுதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மக்கள் கடும் அவதி அடைகின்றன. இதனை தவிர்ப்பதற்காக முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பொதுமக்களின் வசதிக்காக கோவையில் டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு மற்றும் பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது, கோவை டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு மற்றும் பெரிய கடை வீதி ஆகிய 5 இடங்களில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவை மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.