Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாணவர்கள் சூப்பர் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

குஜராத் மாநிலத்தில் 38வது தேசிய சப்-ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக, கேரளா, ஆந்திரா, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரீஸ் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50 மீ, 100 மீ, 200மீ, 400 மீ தூர போட்டிகள் நடைபெற்றது.

இதில் கோவை சேர்ந்த மாணவன் கபிலன் 200 மீ தூர ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளி, 400 மீ தூர ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கலம், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலம், 100 மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவன் வினய்ஸ்ரீ 200 மீ ரிலே நீச்சல் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். மேலும் சாதனை படைத்த மாணவர்களை பயிற்சியாளர் ஜெயராஜ் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.

Categories

Tech |