சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விசாரணை கமிட்டி அமைக்கவும் அதற்கான உதவி என்னும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவை போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் வகையில் தடுப்பது தொடர்பாக வருகின்ற 23 ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் கோவை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.