கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிளஸ் டூ மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஆன வாட்ஸ்அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும் ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது.மாணவியை பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு முன்பாகவே இந்த உரையாடல் நடந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அழைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தற்கொலைக்கு முன்பாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தற்போது நடந்த சம்பவம் தொடர்பானது இல்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அந்த கடிதம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.