Categories
மாநில செய்திகள்

கோவை மாவட்ட ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய தகவல்…!!!!!

கோடைகால சிறப்பு ரயிலாக மேட்டுப்பாளையம் முதல் திருநெல்வேலி  வரை இயக்கப்படும் ரயில்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே  செயல்படுத்தி வருகின்றது. தற்போது கோடைக்காலம் என்பதால் கூடுதலாக சில சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தென் மாவட்டங்களின் முக்கிய தலங்களை காண்பதற்கு வசதியாக மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி  கோடை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் நவீன ரக LHB ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயில் தற்காலிகமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். ஜூன் மாத இறுதி வரை மட்டும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயிலானது கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக செல்லும். குறிப்பாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்,

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், பாபநாசம் அகத்தியர் அருவி, களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயம், மாஞ்சோலை, குற்றாலம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்க விரும்புவோருக்கு மேற்குறிப்பிட்ட சிறப்பு ரயில் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரை பயணிக்க இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயிலில் முன்பதிவு செய்ய 400 ரூபாய் கட்டணம். அதுவே கோவையில் இருந்து புறப்பட 385 ரூபாய் கட்டணம். 3rd ஏசி வகுப்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 1,100 ரூபாயும், கோவையில் இருந்து 1,050 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2nd ஏசி வகுப்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 1,525 ரூபாயும், கோவையில் இருந்து 1,440 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவி

Categories

Tech |