Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: மெட்ரோ ரயில் திட்டம்…. சாத்தியக்கூறுகள் இருக்கிறதா….? ஆர்.டி.ஐ கூறும் தகவல்…. இதோ முழு விபரம்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் தயானந்த கிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.  இது பற்றிய தகவல்கள் தற்போது ஆர் டி ஐ மூலமாக தெரியவந்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9,424 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவர் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றார். இதனையடுத்து மாநில அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியதால், கடந்த 2021 ஆம் ஆண்டு நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை ஆனது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை தி.மு.க அரசு கையில் எடுத்து செய்யுமா என்பது தற்போது கேள்வி குறியாக இருக்கிறது. இந்த திட்டத்தினை கோவையில்  5 வழித்தடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இடவசதி பற்றாக்குறை காரணமாக டபுள் டெக்கர் பாதை அமைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த டபுள் டெக்கர் பாதைக்கு அதிக அளவில் செலவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் மாநில அரசாங்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கையில் எடுத்து அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |