Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று  காலையில் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, தான் மது போதையில் இருப்பதாகவும், கோவை ரயில் நிலையத்திற்கு குண்டுவைக்கப்போவதாக 2 பேர் பேசிக்கொண்டிருப்பதை தான் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில் நிலையம் முழுவதும் ஸ்கேன்னர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதித்தனர். தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |