Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த….. ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் அதிரடி….!!!!

கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார். கோவை வஉசி மைதானத்தில் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோருடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “குணத்தால், மனத்தால் இதமான கோவைக்கு நான் வந்திருக்கிறேன். கோவை மக்கள்தொடாத துறையும், அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை.  பல்வேறு தொழில்களின் மையமாக விளங்குகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகின்றது. கோவை மாநகராட்சிக்கு தேவைப்படும் கட்டமைப்புகளை நிறைவு செய்யும் வகையில் இந்த பகுதிக்கான பெருந்திட்டம் மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டத்திற்கு மேற்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்கு கோவை விமான நிலையம் முக்கியமான ஒன்று. கோவை விமான நிலையத்தை உலக தரத்தில் உயர்த்தும் பணியைத் கலைஞர் துவக்கி வைத்தார். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஆயிரத்து 132 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் என உறுதி அளிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |