முதல்வர் ஸ்டாலினின் தொகுதியாக கருதப்படும் கொளத்தூர் பகுதியில் நின்றுகொண்டு பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட பாஜகவினரை அமைச்சர் சேகர்பாபு இறங்கி வந்து இங்கே என்ன சத்தம் கேட்டவுடன் மனு கொடுக்க வந்தோம் என்று இளைஞர்கள் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த @BJP4TamilNadu தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்!
நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள்.
இதுதான் @arivalayam கட்சியினுடைய அழகு! pic.twitter.com/RnCvOaYwiP
— K.Annamalai (@annamalai_k) November 9, 2021
இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை ஆளும் கட்சியினர் சேகர்பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும். நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள். இதுதான் திமுக கட்சியினுடைய அழகு” என்று விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.