Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோஷ்டி மோதல்ல இப்படி செஞ்சிட்டாங்க…. கட்சியினர்கள் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அரக்கோணத்தில் தேர்தலை முன்னிட்டு நடந்த கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கக்கோரியும், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் திமிரியின் வட்டார செயலாளரான ரகு என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சில முக்கிய பிரமுகர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |