கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், சிங்கம்புலி, சுஜிதா, ஜாக்குலின், மைனா, சௌந்தர்ராஜன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சொந்தமுள்ள வாழ்க்கையில் என்கிற இந்த அழகான பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.