கசட தபற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வரும் சிம்பு தேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் . பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Happy to launch the #KasadatabaraTeaser – https://t.co/LB08XFDBhU
Congrats @vp_offl @chimbu_devan @tridentartsoffl and Team Kasadatabara 👍🏽#KasadatabaraOnSonyliv from aug27@SonyLiv @Muzik247in
— VijaySethupathi (@VijaySethuOffl) August 16, 2021
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ், பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகிறது. இந்நிலையில் கசடதபற படத்தின் விறுவிறுப்பான டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் குரலில் வெளியாகியுள்ள இந்த டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.