நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ‘கண்ணுங்களா’ பாடலுக்கு ஒரு சுட்டிப் பெண் நடனமாடிய வீடியோவை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை . வித்தியாசமான காமெடி ,ஹாரர், திரில்லர் படமான இந்தப் படத்தில் ரெஜினா கஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Cute da papa 😍😍😍 https://t.co/36NnTUPRWA
— S J Suryah (@iam_SJSuryah) March 16, 2021
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா பாடலுக்கு ஒரு சுட்டிப் பெண் குழந்தை நடனமாடும் வீடியோவை எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘கியூட் டா பாப்பா’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.