நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் வீட்டு வாடகை செலுத்த முடியும்.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று முதல் கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் 99 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்கப்படும். அதனைப் போலவே இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ப்ராசசிங் கட்டணமும் 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய கட்டணம் 99 ரூபாய். இதற்கு ஜிஎஸ்டி கூடுதலாக செலுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டு வருகின்றது.