Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர்  கிராமத்தில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன்  ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வேணுகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேணுகோபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |