Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சகோதரர்களுடன் சிறுவயதில் சிரஞ்சீவி… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர்களுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். வருகிற மே 13ஆம் தேதி ஆச்சார்யா படம் ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர்கள் பவன் கல்யாண், நாகபாபு ஆகியோருடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. இன்று (மே 24) சர்வதேச சகோதரர் தினத்தில் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள இந்த கருப்பு-வெள்ளை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |