தந்தை இறந்தவுடன் குடும்ப பொறுப்பை ஏற்ற சார்லஸ் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காக ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசரான பிலிப் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பினை அவரது மகனான சார்லஸ் ஏற்றுள்ளார். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு சார்லசுக்கு தன் பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படுகிறது. ஆனால் மகாராணி யோசனைப்படி வில்லியமும், ஹரியும் தாத்தாவின் இறுதி சடங்கில் சவப்பெட்டியின் பின்னால் சேர்ந்து நடக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். எனினும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்டதால் மகன்களை சேர்த்துவைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
அத்திட்டத்தின்படி இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்ததும் தேவாலயத்திலிருந்து குடும்பத்தினரை ஏற்றிச் செல்வதற்காக கார்கள் வந்துள்ளது. ஆனால் சார்லஸ் வந்த கார்களை திருப்பி அனுப்பிவிட்டார். ஆகையால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு நடக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இருவரும் தம்பி ஹரிக்காககாத்திருந்தனர். அவர் வந்ததும் மூவருமாக சேர்ந்து நடக்க தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து வில்லியமும், ஹரியும் பேசிக்கொள்வார்களா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில் அவர்கள் இருவரும் வழக்கம்போல பேசிக்கொண்டே நடந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பேசிக்கொண்ட வந்ததை பார்த்த சார்லஸ் நினைத்தது நடந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் இருந்தார். இவ்வாறு குடும்ப பொறுப்பை ஏற்ற உடனே அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காக சார்லஸ் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார்.