இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் சகோதரர்களான இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஒன்றுசேர போவதில்லை என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் பின்னால் இளவரசர் ஹரியும், மேகனும் ஒன்றாக நடந்து செல்ல மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சிறு வயது முதலே தாங்கள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் ஒன்றாக செல்வார்கள். இந்நிலையில் முதல்முறையாக சகோதரர்கள் இருவரும் பிரிந்து நிற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் அவரது உடலுக்கு பின்னால் சகோதரர்கள் இருவருக்கும் நடுவில் இளவரசி ஆனுடைய மகனான இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் யாரால் முடிவெடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரண்மனையின் செய்தி தொடர்பாளரா பக்கிங்காம், இது ஒரு இறுதி சடங்கு நிகழ்ச்சி எனவும், இந்த திட்டங்கள் அனைத்துமே மகாராணியாரின் விருப்பப்படி நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வேறு எந்த வித கற்பனையும் செய்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.