Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சகோதரிக்கு திதி கொடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி தர்மபுரி எம்.ஜி.ஆர் நகரில் விவசாயியான சக்திவேல்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வேலியின் சகோதரி இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த சகோதரிக்கு திதி கொடுப்பதற்காக சக்திவேல் தனது மகன் பாலமுருகன் உறவினரான துர்கா தேவி ஆகியோருடன் செரையாம்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு திதி கொடுத்த பிறகு சக்திவேல் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சக்திவேலை அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரவு முழுவதும் சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சக்திவேலின் சடலம் மீட்கப்பட்டது. இதனை அடுத்து சக்திவேலின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |