காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது சகோதரியான ஈஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட விஜயலட்சுமி திரும்பி வரவில்லை.
இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஈஸ்வரி விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.