மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிளாங்கோடு பகுதியில் எலக்ட்ரீசியனான சாம்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சாம்சன் தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சாம்சன் சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாம்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சாம்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.