மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் அய்யன்கோட்டை அய்யனார் கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போது பராசக்தியின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது.
இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த பராசக்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பராசக்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.