Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சக ஊழியருடன் வீட்டிற்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் குணசேகரன் மோகனாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் குணசேகரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குணசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி விடுகின்றனர்.

Categories

Tech |