பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் தனது சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து,அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை போலீசார் கைது செய்தனர். வீடியோ கசிந்ததால் பல மாணவிகள் தற்கொலை செய்ய முயன்றதாக சமூகவலைதளத்தில் வெளியான தகவலை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன.
மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க விட மாட்டோம் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதியளிக்கிறேன் என பஞ்சாப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் கூறியுள்ளார்.