சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள Berk shire என்ற பகுதியைச் சேர்ந்த olly stephens என்ற 13 வயதுடைய சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக 13 வயதுடைய சிறுமி மற்றும் சிறுவர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து olly யின் மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று அவரின் சகோதரி எமிலியா(16) தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை குறித்து ஒரு நபர் கூறியுள்ளதாவது, சம்பவம் நடந்த இடத்தில் என் மனைவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது olly கீழே விழுந்து கிடந்துள்ளார். மேலும் அவரை சுற்றி ஆட்கள் இருந்ததை கண்டதாக கூறியுள்ளார். மேலும் துப்பறியும் கண்காணிப்பாளரான கெவின் பிரவுன் கூறியுள்ளதாவது, இதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளோம். இது தொடர்பாக சிறுவர்கள் 5 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இது குறித்து யாருக்காவது தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.