சிங்கப்பூர் பள்ளியில் சக மாணவனை கோடாரியால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் பிரபல பள்ளிகளில் ஒன்றான ரிவர் வேலி மேல்நிலைப் பள்ளி கடந்த திங்கள்கிழமை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனிடையே கழிவறைக்கு சென்ற 13 வயது மாணவன் கோடாரியால் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட அவனது தோழர்கள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் ஆசிரியர் அளித்த தகவலின்படி விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் அதே பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் அந்த சிறுவனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த 16 வயது மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.