Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக மாணவருக்கு மெசேஜ் அனுப்பிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிய நிவேதாவை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |