Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |