Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 5 ஏக்கர் நிலம்”….. 2 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு….!!!!!

சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே இருக்கும் இருகாலூர் ஊராட்சியில் உள்ள புது ஏரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமித்து சில விவசாயிகள் வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தார்கள். இதனால் சங்ககிரி தாசில்தார் பானுமதிக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தாசில்தார் சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் ராஜு, சங்ககிரி வட்ட துணை சர்வேயர் சுப்ரமணி, கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நில அளவீடு செய்தபொழுது ரூபாய் 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் அங்கு ஆக்கிரமிப்பு செய்து பயிரடப்ப்பட்டிருந்த 127 தென்னை, 1000 வாழை மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தார்கள். இதன் மூலம் ஐந்து ஏக்கர் பரப்பிலான 2 கோடி மதிப்புள்ள ஏரி புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |