திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புனவாசல் மழுப்பெருத்த விநாயகர், அச்சம் தீர்த்த விநாயகர், கலிதீர்த்த ராஜவிநாயகர், வெள்ளை விநாயகர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றுள்ளது.
இதில் அந்தந்த கோவில்களில் உள்ள விநாயகருக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.