நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகரில் புகழ்பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சுவாமியை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் இருக்கும் விநாயகர், மருத மரத்து விநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு தேன், பால், இளநீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றது.