Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சம்பவம்…… குற்றவாளிகள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை….!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் என 5 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து பேரும் ஆறு மாத ஊருக்குள் நுழைய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Categories

Tech |