Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. தலைமை ஆசிரியருக்கு அறிவுரை….!!!!!

சங்கராபுரம் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் மதிய உணவு தரமானதாகவும் சுவையாகவும் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடங்களை முறையான அனுமதி பெற்று இடித்து அகற்றிடவும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |