அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், முத்தையா இயக்குகின்ற “விருமன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கின்றார். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி சங்கர் அண்மையில்தான் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். இவர் தற்போது விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அடுத்து சிம்பு கதாநாயகனாக நடிக்கும் “கொரோனா குமார்” படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
A little bucket of sass pic.twitter.com/yg9ImXfmAM
— Aditi Shankar (@AditiShankarofl) February 5, 2022
இணையதளங்களில் அவ்வபொழுது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் அதிதி. தற்போது ட்விட்டரில் அவர் எடுக்கும் போட்டோஷூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அது இப்போது வைரலாகி வருகிறது.