முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அனைத்து படங்களையும் முதல் ஷோ பார்த்துவிட்டு கமாண்ட் தெரிவிக்கும் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சங்கரின் மகளை பார்க்க தான் வந்தேன். சங்கர் சார் அதிதியை நான் காதலிக்கிறேன். நீங்கள் பெரிய இடம் ஆனால் நான் ஏழை தான்.உங்கள் மகளை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் கமிஷனர் அலுவலகம் செல்வேன் என்று கையில் வைத்திருந்த ஒரு பேனரை காட்டி நகைச்சுவையாக பேசினார்.
ஆனால் தற்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை, “அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள்”என்று அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஒருவேளை அடி பலமோ? அதான் இப்படி அந்த பல்டி அடிக்கிறார் என்று கலாய்த்து பேசி வருகிறார்கள்.