Categories
ஆன்மிகம் விழாக்கள்

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Categories

Tech |