எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறீர் .
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார் .
இதோ! இஸ்ரவேலைக் காக்கிறவர்; உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்தில் உனக்கு நிழலாய் இருக்கிறார்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும், உன்னை சேதப்படுத்துவது இல்லை .
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
உன் போக்கையும் உன் வரத்தையும், இது முதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.