தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் தேவையற்ற குழப்பங்களை சிலர் உருவாக்க முயற்சி செய்வதாக தமிழ் துறை வளர்ச்சிதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்புகளை ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் தவறாக ஊடகங்களில் திட்டமிட்டு தகவல்களை பரப்புகின்றனர்.
சங்க இலக்கிய வாழ்வியல், திராவிட களஞ்சியம் நூல் வெளியிடுவது குறித்தும் சில தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கியம் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்பு வெளியிடப்படும். கால்டுவெல் தொடங்கி ஐராவதம், மகாதேவன் போன்ற அறிஞர்களின் ஆய்வுகள் நூலாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.