Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகலாவாக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை..!!

மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு  ’தலைவி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது .  இப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.  இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் .  இவர்  தீவிர பயிற்சி எடுத்து ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் எம் .ஜி .ஆர் வேடத்தில் தனி  ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி நடிக்கிறார்  .இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தெறி  ,எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களில் இசை அமைத்த ஜி .வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்  .
Image result for பிரியாமணி
கடந்த மாதம் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கலவையான   விமர்சனங்களை பெற்றது. கங்கனாவின் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என நெட்டிசன்கள் கேளி  செய்தனர். இந்நிலையில், இப்படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல  நடிகை பிரியாமணி  நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் பருத்திவீரன் எனும்  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். இதற்காக இவருக்கு   தேசிய விருது வழங்கப்பட்டது   குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |