தமிழகத்தில் சசிகலாவால் நான் முதல்வராக வில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். சசிகலாவால் நான் முதல்வராகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எப்போதும் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருந்ததால் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு தரப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.