அ.தி.மு.க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி.டி.வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் அதிமுக-வை கைப்பற்றுவோம் எனக்கூறி வந்த டிடிவி தினகரன், நேற்று அதிரடியாக அதிமுக-வும், அமமுகவும் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். அத்துடன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டாமென தான் சொல்லியதை சசிகலா கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி-ன் இப்பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் இடையில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அதாவது “எடப்பாடி தான்தான் பொதுச் செயலாளர் என கூறுகிறாரே என்ற கேள்விக்கு ஒரு சிலரின் சுயநலம் , ஆணவம், அகங்காரத்தால் சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் இயக்கம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் நீதிமன்றமே தீர்ப்பளிக்கும் இல்லை எனில், வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் என்று தினகரன் கூறினார். ஓ.பி.எஸ் சட்ட ரீதியாக போராடி வருகிறார். ஓ.பி.எஸ் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான். எடப்பாடி வீட்டிற்கு போலீஸ் சென்றால் பயந்து விடுவார். எடப்பாடியை முதலமைச்சராக தேர்வுசெய்தது தவறென அப்போது சசிகலாவிடம் கூறினேன். அத்துடன் எடப்பாடி தொடை நடுங்கி” எனவும் கடுமையாக விமர்சித்தார்.