நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி தொண்டர்களுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஜேந்திரபாலாஜி கைது, ஜெயக்குமார் கைது, போன்ற நடவடிக்கைகளும் கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்நிலையில் இதுதான் சரியான நேரம் என அதிமுகவை கைபற்ற சசிகலா திட்டம் தீட்டியுள்ளதாக ஒரு சில அரசியல் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. அதோடு தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி தன்னுடைய அதிரடியான பேச்சுகள் மூலம் தன்னை நிரூபிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இத்தனை நாள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா ஏற்கனவே கடந்த சில நாட்களாக மக்களை சந்திக்க திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது. எனினும் கொரோனா காரணமாக அதை அவர் செயல்படுத்தவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் தன்னுடைய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தார். எனவே தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி கட்சி தலைமைக்கு பெரும் அமைந்துள்ள நிலையில் சசிகலா தன்னுடைய வேலையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எக்காரணம் கொண்டும் தினகரனை மட்டும் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது என சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக மருத்துவர் வெங்கடேசன் சசிகலாவுக்கு பக்கபலமாக இருப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது .